Give Missed Call Now : +91 9696 158 158
My Cart
0.00
Blog
மனையியல் (Home science) - முக்கியத்துவம்

மனையியல் (Home science) – முக்கியத்துவம்

மனையியல் (Home science) முக்கியத்துவம் – மனையியலானது, வீட்டு பொறுப்புகளை பராமரிப்பது மட்டுமே என்பது காலம் காலமாக வலம் வந்த கருத்து. 

வாழ்க்கைப்போக்கு (Career)  என்பது பெண்களுக்கு பெரிதாக இல்லையென்றும்,  அவர்கள் வீட்டு மனைகளை பராமரிக்க மட்டுமே பயன்படுவர் எனவும் ஒதுக்கி வைத்த மகான்கள் பலர் .

அவர்களுக்கு உகந்த படிப்பு மனையியல் என்றே பலரும் நினைப்பர்.  அஃது , உண்மையில்லை. 

உறவுகள் பலப்படுத்துவதற்காகவும், இல்லற வாழ்க்கையை சுமூகமாக நடத்தவும், மனை அறிவியல் (Home science) மிகவும் கைகொடுக்கும்.

மனையியலானது காலப்போக்கில் பல திசைகளை தொட்டு ஊட்டச்சத்து (Nutrition), சமூகவியல் (Society) , சமூக வாழ்க்கை (Social Life), உளவியல் (Psychology),  மனை பொருளியல் (home economics) போன்ற பல பிரிவுகளின் கூட்டாக வடிவெடுத்து உள்ளது. 

மனையியலானது கலையும், அறிவியலும் கலந்தது ஆகும்.  மனையியல் போன்றது நல்லதான வாழ்க்கை போக்கு வாய்ப்புகளையும் (Career Opportunities) கொடுத்து இல்லற வாழ்க்கையை மேன்மையும் படுத்துகிறது.

மனையியல் (Home science) முக்கியத்துவம் :

  • Home science கல்வியானது, ஒருவனை பொறுப்புள்ள மனிதனாகவும் இல்லற வாழ்க்கையை சிறப்பிப்பவனாகவும் ஆக்குகிறது. அது தனிமனித முன்னேற்றத்தையும், பொது உலக முன்னேற்றத்தையும் பொதுவாக வலுவடைய செய்கிறது. 
  • மனையியல் ஆனது மனிதனை சம நிலை வாழ்க்கை (Balanced-life) வாழவும், குடும்ப செலவுகளை கட்டுப்படுத்தவும் , குழந்தைகளின் வாழ்க்கையை சிறப்பிக்கவும், ஆடை அலங்காரம் செய்து கொள்ளவும், பாரம்பரியத்தை கற்றுக்கொள்ளவும் வழி வகுக்கிறது.
  • உணவு மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துதல் (Food and Nutrition enhancement)  – மனையியலின் முக்கிய பிரிவாகும். தினசரி புதிய காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு சமநிலை உணவு (Balanced Food)  தயாரிக்க சில முக்கிய கருத்துகளை மனையியல் கற்றுக்கொடுக்கும்.
  • தினசரி அதிகரித்து வரும் மாசடைந்த காற்றும் (Polluted air) கலப்படம் செய்த உணவும் (adulterated food)  மனிதனை தன் உடலை ஆரோக்கியமாகவும்,  நச்சு பொருட்களை வெளியேற்றவும் (Detoxification) வைக்க இயலாமல் செய்கிறது. இதற்காகவே பல உடனடி ஊட்டச்சத்து ஏற்றுண்ணிகளும் (Instant health boosters) மற்றும் நச்சு வெளியேற்றிகளும் (Detox Supplements) உருவெடுத்துள்ளன.
  • மனையில் பயில்வது, சமூகம் மற்றும் இல்லறம் பற்றிய பொது கருத்தை மாற்றும். கல்வி பயின்ற மேம்படுத்தப்பட்ட குடிமகனாக மாற்றும். 
  • பள்ளிக்கூடங்களில் மனையியல் ஒரு பாடமாக சேர்ப்பதன் மூலம் குழந்தை பருவங்களில் இருந்ததே கற்றிட படுகிறது.

மனையியல் கற்பதன் மூலம் வீட்டிற்கும் சமூகத்திற்கும் ஆரோக்கியமான உணவையும் சரியான ஊட்டச்சத்து சாப்பிடுவதற்கான வழிமுறைகளையும் பழகிக்கலாம்.

இதனில் மேலாய்வு செய்து வீட்டு பராமரிப்பிலும் (Home Management) உணவு உண்டிகள் பராமரிப்பிலும் (Hotel Management) சிறப்பு பதவிகள் வகிக்கலாம். 

கொரோனா வைரஸிலிருந்து உடலைப் பாதுகாக்க ஒரு நல்ல நோயெதிர்ப்பு அமைப்பு தேவை. அவ்ரிப்ளஸ் தினமும் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற ஒரு தயாரிப்பை வழங்குகிறது, மேலும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

Posted by admin

Leave your thought