Give Missed Call Now : +91 9696 158 158
My Cart
0.00
Blog
பசித்து புசி - இஃது அவசியமா?

பசித்து புசி – இஃது அவசியமா?

பசித்து புசி – இஃது அவசியமா?

 வாழ்க்கை எளிமையாக இருந்த காலத்தில்,  மனிதனின் நோக்கம் கடுமையாக உழைத்து நிம்மதியாக வாழ வேண்டும் என்பது மட்டுமே.  உடல் எடை குறைத்தலோ, ஊட்டச்சத்து என தனியாக உட்கொள்ளுதலோ இல்லை.

 தினசரி உண்ணும் உணவே அவர்களுக்கு சத்தாகவும் மருந்தாகவும் பயன்பட்டது. 

தொழில்நுட்பம் வளர வளர,  மனிதனின் வாழ்வாதாரமும் வளர்ந்தது. மனிதனின் வாழ்விற்கு உதவும் கரமாய் உருவாகிய தொழில்நுட்பம், தற்போது மனிதனை அடிமையாக்கி உள்ளது.  இன்றைய காலத்தில் உடல் வலிமையை பயன்படுத்தி செய்யும் வேலைகளை உடற்பயிற்சி எனவும், உட்கார்ந்த இடத்திலிருந்து கைப்பேசி தொழில்நுட்பம் (Mobile phone technology) மூலம் வேலைகளை செய்துகொள்வதை புத்திசாலித்தனம் ஆகவும் பார்க்கின்றனர். 

காலத்தின் மாற்றம்:

இவ்வாறு செய்வதனால் பசித்து உண்ணும் பழக்கம் மறந்து, சமயத்திற்காகவும் சுவைக்காகவும் உண்ணும் பழக்கம் வந்து விட்டது. நன்கு சாப்பிட்டு,  நன்கு உழைத்த நம் முன்னோர்களின் நாட்கள் கடந்து, பசித்தால் மட்டுமே உண்ண வேண்டிய பழக்கத்தை நினைவூட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறோம்.

அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்னவாகும்?

நம் வயிறானது, நன்கு பசிக்கிறது என்று சுரப்பிகளை சுரந்து, நம்மை உண்ண செய்யும் செய்கையானதையே இயற்கை ஆகும்.  அவ்வாறு புசிக்கும் உணவு மட்டுமே ஆற்றல் சக்தியாய் மாறும் . சுவைக்காகவும் ஆசைக்காகவும் உண்ணும் உணவானது முழுதாய் செரிமானமும் அடையாமல் , ஆற்றல் சக்தியாகவும் மாறாமல் வயிற்றிலேயே அழுகிவிடுகிறது. HCL Acid  சுரப்பது குறைவதனால் மட்டுமே உணவு அவ்வாறு அழுகும் நிலைக்கு தள்ளப்படுகிறது. 

வயிற்றின் அளவுக்கு மீறி உண்ணும் பழக்கத்தினை தவிர்த்தல், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.  தேவைக்காக உண்ணுதலின் (Food with purpose) முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும்.

 உடற்பயிற்சி அத்தியாவசியமா இல்லை அனாவசியமா? 

ஓடிக்கொண்டே இருக்கும் இக்கால கட்டத்தில், நன்கு உடலுக்கு பயிற்சி அளித்து, தேவைக்கு ஏற்ற எளிமையான உணவை உண்ணும் பழக்கத்தை கொள்ளல் வேண்டும். 

உடற்பயிற்சி என்று கொள்கையில் தன் சக்திக்கு மீறிய காரியங்களை குறிப்பிடுவது அல்ல. வாழ்வாதாரத்தின் சில எளிமையான வேலைகளை தொழில்நுட்பம் தவிர்த்து உடலின் வலுவினால் செய்வது ஆகும்.

அவற்றுள் சில,

1.அன்றாடம் உணவினை ஆன்லைனில் ஆர்டர் செய்யாமல் நல்லகாய்கறிகளை நடந்து சென்று உற்பத்தியாளர்களிடமே வாங்கி சமைத்து உண்ணுதல். 

2.லிப்டுகளை (Lift)  தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்துதல்.

3.பக்கத்திலேயே இருக்கும் இடங்களுக்கு பைக் பயன்படுத்தாமல் நடந்து செல்லுதல்.

 4.பொழுது காலை 20 நிமிட நடைபயிற்சியுடன் தொடங்குதல்.

இவ்வாறு செய்வதனால் பெரிய மாற்றங்கள் இல்லாத போதிலும்,  பசி எடுக்க சில காரணிகளாக அமையும். 

விடியும் காலை, நிச்சயமில்லாத வாழ்க்கை வாழ்கிறோம்.

பசித்து உண்டு நோயின்றியும் பகையின்றியும் வாழ முயற்சிப்போம் !

Posted by admin

Leave your thought