Give Missed Call Now : +91 9696 158 158
My Cart
0.00
Blog
தண்ணீர்-வாழ்வாதாரத்தில் ஒரு முக்கிய அமைப்பு

தண்ணீர்-வாழ்வாதாரத்தில் ஒரு முக்கிய அமைப்பு

தண்ணீர்-வாழ்வாதாரத்தில் ஒரு முக்கிய அமைப்பு – நம்மில் பலரும் அறியாத கருத்து – தண்ணீர் உயிர்வாழ முக்கிய காரணி என்று. உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தவும், உடல் உறுப்புகள் சீராக இயங்கவுமே ஒவ்வொரு மனிதனும் தண்ணீரை நம்புகிறான். 

உடலிலுள்ள கிருமி நாசினிகளை வெளியேற்ற,  உடல் நீரேற்றத்துடன் (Hydration) இருப்பது அவசியமாகும்.  உடலின் அங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆற்றல் சக்தியை அனுப்பி சீராக இயங்க செய்வது தண்ணீர் தாம். 

உடற்பயிற்சி செய்யும்பொழுது மனிதனின் தோலுக்கு(Skin)  அருகிலுள்ள இரத்தக்குழாய்கள் சுருங்கி விரியும். அவ்வாறு செய்வதால் இரத்த குழாய்களில் இருந்து வெப்பம் வெளியேறும்.  அவ்வாறு வெளியேறும் வெப்பமானது உடல் நீரேற்றம் (Hydration) இல்லாமல் போனால் மேலும் வெப்பம் அடையச்செய்யும். 

 சராசரி தினம் பருக வேண்டிய நீர் அளவு:

 ஒவ்வொரு மனிதனும் தினம் குறைந்தபட்சம் 8 கோப்பை (glasses) நீர் குடித்தல் வேண்டும். இஃது ஏறக்குறைய 2  லிட்டர் நீருக்கு சமமானது. 

ஒரு மனிதன் பருக வேண்டிய நீர் அளவு அவனது வயது (age) , பாலினம் (gender) ,  சுற்றுப்புறம் (environment) மற்றும் செய்யும் வேலைகள் (activity) போன்றவை திட்டமிட உதவும். சீராக பணி செய்யும் இதயம் மற்றும் சிறுநீரகம் கொண்டவர்கள் குறைந்தது 30ml/kg  நீர் பருகுவது நன்று. 

சிறுநீரக மற்றும் இதர நோயாளிகள், மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று நீர் பருகுதல் அவசியம்.  ஆலோசனை இன்றி அதிகமாக நீர் குடித்து அவதிப்பட்டவர்களும் உண்டு. 

 எந்த நீரை பருகுதல் நன்று? 

நம் முன்னோர்கள் யாரும் நீரை சுத்தீகரிக்கவோ (water purification methods) சிகிச்சை செய்யவோ (water treatment)  இல்லை.

வானில் இருந்து வரமாய் வந்த மழைநீரை காய்த்து, காயவைத்து மட்டுமே பருகினர்.

ஆநால்  தற்போதைய சுற்றுச்சூழலும், சுகாதாரமற்ற நீர்நிலைகளும் , பெயரற்ற நோய்களும் மக்களை நவீன நீர் சிகிச்சை முறைகளை ( modern water purification techniques)  பயன்படுத்த செய்கிறது. 

 நீரை காய்த்து, காயவைத்து,  வடிகட்டி பருகுவதே பழமையும் எளிமையும் ஆன முறை ஆகும்.

குறைவான நீர் உட்கொள்ளுவதால் வரும் ஆபத்துகள் என்ன?

 உடலின் சீரான பணி தொடரவும்,  வெப்பத்தன்மை குறையவும், நீர் உட்கொள்ளுதல் பெரும்பான்மையாக உதவுகிறது. 

நீர் உட்கொள்ளுதல் (water intake) குறைவதனால் பல நோய்கள் வர வழி உருவாகிறது . நீரேற்றமானது (Dehydration) உடலில் உள்ள ஆற்றலை குறைத்து விரைவில் சோர்வடைய செய்கிறது.  இதனால் பல இதய நோய்கள் வரவும் வாய்ப்புகள் வருகின்றன . 

தண்ணீர்-வாழ்வாதாரத்தில் ஒரு முக்கிய அமைப்பு – நிறைவாக நீர் பருகி , நல்லதோர் வாழ்வொன்று வாழ முயற்சிப்போம்!

எந்தவொரு சிறப்பு உடற்பயிற்சியும் அல்லது சிறப்பு உணவும் இல்லாமல் இயற்கையாகவே உடலை நச்சு நீக்க செய்யும் எளிய உணவுகள் இவைதான். இயற்கை மூலிகை தயாரிப்புகள் – எடை இழப்பு உணவுகள் தினமும் இரவு உணவுக்கு 30 நிமிடங்கள் கழித்து இதை அருந்தினால் உடலில் உள்ள நச்சுக்களை  நிக்கும்.

Posted by admin

One thought on “தண்ணீர்-வாழ்வாதாரத்தில் ஒரு முக்கிய அமைப்பு

Leave your thought