Give Missed Call Now : +91 9696 158 158
My Cart
0.00
Blog
உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்க 5 எளிமையான டிப்ஸ்

உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்க 5 எளிமையான டிப்ஸ்

    உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்க 5 எளிமையான டிப்ஸ்!

 

ஆரோக்கியமற்ற உணவும் வாழ்கையும் பல பெயரில்லா நோய்கள் உருவாக காரணமாக உள்ளது . சுகாதாரமற்ற உணவும் , கலப்படம் செய்த குடிநீரும் மாசடைந்த காற்றும் உடைய வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலையை நாம் அடைந்துவிட்டோம். 

உடல் ஆரோக்கியத்தை சம நிலைக்கு கொண்டுவர வாழ்வுமுறையில் சில மாற்றங்களை ஏற்பது அவசியம்.

உடலுக்கு உடற்பயிற்சி ,மனதிற்கு தியானம் ,சாந்தமான இசை ,சத்தான உணவு மற்றும் நச்சுக்களை நீக்கும் வழக்கத்தை தினசரி வாழ்க்கையில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

 

(Detox) நச்சுநீக்கம் : அவசியமானதா?

 

நம் உடலானது அதனுள் சேரும் நச்சுகளை கல்லீரல் ,சிறுநீரகம் போன்ற செரிமான அமைப்புகளை கொண்டு நீக்கும். இவை இயற்கை நச்சு நீக்கிகள்(Natural Detoxing agents). ஆனால்,  இந்நாட்களில் உணவில் உள்ள அதிகப்படியான நச்சுகள் நம் இயற்கை செரிமான அமைப்புகளை தோல்வி அடையசெய்கிறது.

 

ஆக, நம் உடலில் சேரும் நச்சுகளை நீக்க (Detoxify) வாழ்வுமுறையில் சில சேர்க்கைகள் தேவைப்படுகின்றன.

 

உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்க டிப்ஸ்

நச்சுக்களை நீக்க 5 எளிய முறைகள் (De-toxification methods):

        1.தினசரி , நாட்களை எலுமிச்சம் பழத்துடன் துவக்குங்கள்

தினசரி காலை எழுந்தவுடன், சிறிது வெந்நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து குடிப்பதனால் உடல் நாள் முழுவதும் நீரேற்றத்துடன் இருக்கும்.  இரவு நேரத்தில் உடலிலுள்ள நீர் தன்மை குறையும் பட்சத்தில் இந்த எலுமிச்ச பழ நீர் உடலை நீரேற்றம் அடைய செய்கிறது. 

எலுமிச்சம் பழமானது  பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலெக்ட்ரோலைட்சை கொடுக்கிறது. மேலும்,  இப்பழக்கம் கல்லீரலை செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளை சுரக்க செய்கிறது. இம்முறையானது நச்சுகளை நீக்கி,  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும். 

       2.சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள்  

கீரைகள், தாவர அடிப்படையிலான உணவுகள் மற்றும் உயர் ரக அசைவ உணவுகள் போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் புரதங்கள் உடலில் சேரும்.  இவை உடலிலுள்ள நச்சுகளை நீக்கி, நாள் முழுவதும் புத்துணர்ச்சி தரும்.

       3.வியர்வை சிந்திடுங்கள் 

உடற்பயிற்சிகள் தினமும் செய்து,  உடலிலுள்ள தேவையில்லா கொழுப்பை எரித்திடுங்கள்.  முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்விற்கு உதவும். இதுவும் உடலிலுள்ள நச்சுகளை நீக்கும் (Detoxification)  முறையாகும்.

  1. நன்கு உறக்கம் கொள்ளுங்கள் 

 சரியான தூக்கமின்மை,  அளவிற்கு அதிகமான நச்சுகளை உடலில் சுரக்கும்.  இவ்வாறு சுரக்கும் நச்சுகள் உடலின் நிணநீர் அமைப்பை (Lymphatic system)  பாதிக்கும். சராசரி நாள் ஒன்றுக்கு 7-8 மணி நேரம் ஓய்வெடுத்தல் அவசியம். 

போதிய தூக்கமின்மை,  உடலின் செய்கைகளை பாதித்து அதிக அளவில் நச்சுகளை சுரக்கும்.  நேரத்துடன் தூங்கி அதிகாலையில் துயில் எழ பழகுதல் நன்று. 

       5.நன்கு நீர் பருகுங்கள்

சராசரி நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 ltr தண்ணீர் குடித்தல் வேண்டும்.இவ்வாறு செய்வது உடலிலுள்ள தேவையில்லா நச்சுகளை நீக்கிட உதவும். கூடுதலாக உடல் எடையை குறைக்கவும்,  உடல் ஆற்றலை அதிகரிக்கவும் செய்யும்.

 

எந்தவொரு சிறப்பு உடற்பயிற்சியும் அல்லது சிறப்பு உணவும் இல்லாமல் இயற்கையாகவே உடலை நச்சு நீக்க செய்யும் எளிய உணவுகள் இவைதான். இயற்கை மூலிகை தயாரிப்புகள் – எடை இழப்பு உணவுகள் தினமும் இரவு உணவுக்கு 30 நிமிடங்கள் கழித்து இதை அருந்தினால் உடலில் உள்ள நச்சுக்களை  நிக்கும்.

Posted by Akshaya Venkatesan

Leave your thought